மாநில நிதியிலிருந்து நாகை மாவட்ட ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்கினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மணிசங்கர் ஐயர்.
நாகை மாவட்டம் குத்தாலம் கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏழை விவசாயிகளுக்கு மாநில நிதியிலிருந்து இலவச டிராக்டர் வழங்கிய மணிசங்கர் ஐயர், நிறைவேற்ற முடியாத மசோதாக்களை அவசரச் சட்டங்கள் என்று உடனடியாக அனுமதி அளிப்பது என்பது தற்போதையக் காலக்கட்டங்களில் பெருகி வருகிறது என்றும், இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு தீங்கை விளைவிக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அதரவு அளித்துவிட்டு,மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்று கூறியுள்ள இவர்,இது விவசாய நலனுக்கு எதிரானது என்று தெரிந்தும் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு மட்டும் தமிழக அரசு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

0 Responses to மாநில நிதியிலிருந்து ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்கினார் மணிசங்கர் ஐயர்