சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரச படைகளை எதிர்த்து சிரியாவில் போரிட்டு வரும் ஆயுதம் தாங்கிய எதிரணிப் போர்க் குழுக்கள் யுத்த நிறுத்தம் தொடர்பில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் ஐ.நா விடுத்த அழைப்பாணையை நிராகரித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்குக் கிடைத்த ஓர் கடிதம் வாயிலாகத் தெரிய வந்துள்ளது.
சிரியாவில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஆயுதம் தாங்கிய சுமார் 30 எதிரணிக் குழுக்கள் ஐ.நா இன் சிரியத் தூதரான ஸ்டஃப்ஃபன் டே மிஸ்டுராவுக்கு வரைந்த கடிதத்தில் அவரது அழைப்பை நிராகரித்திருப்பதுடன் அவர் நடுநிலை வகிக்காது அரசுக்கு சாதகமாகச் செயற்படுவதாகவும் அசாத் தலைமையில் சிரியாவில் அரங்கேற்றப் பட்டு வரும் இனப்படுகொலையைக் கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளன. இதற்கு முன் மிஸ்டுரா முதன் முறையாக ஆயுதம் தாங்கிய எதிரணியினரை நேரடியாக ஜெனீவா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்க முயன்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மிஸ்டுராவோ பெப்ரவரியில் அவர் மும்மொழிந்திருந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பில் வன்முறையைக் குறைப்பதற்கான தீர்வில் சிரிய அதிபர் அசாத்தும் ஓர் பகுதியாக விளங்குவார் என்றே தெரிவித்திருந்ததாகவும் ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளதாகவும் மறுபடி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஜெனீவா பேச்சுவார்த்தையில் ஈரானுக்கும் அழைப்பு விடுப்பது என மிஸ்டுரா எடுத்த முடிவையும் சிரிய எதிரணிக் குழுக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன. அதாவது ஈரான் சிரியாவை ஆக்கிரமித்துத் தனது அரேபிய மற்றும் இஸ்லாமிய அடையாளத்தை நிலைநாட்டவும் மனித உரிமைகளை மீறி வன்முறையில் ஈடுபடவுமே அது செய்யும் எனவும் எனவே சர்வதேச சமூகம் சிரிய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஒரு போதும் ஈரானை அழைக்கக் கூடாது எனவும் சிரிய எதிரணிக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

0 Responses to ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆயுதம் தாங்கிய சிரிய எதிரணிக் குழுக்கள்