நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த மாதம் 15ம் திகதி நேபாளத்தில் அடுத்தடுத்து மிகக் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த துயரத்திலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் நேபாளத்தில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டாலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7.12 மணிக்கு நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகி உள்ளது.நேபாளத்தில் அடுத்தடுத்து இப்படி நில அதிர்வுகள், நில நடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

0 Responses to நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நில நடுக்கம்: மக்கள் பீதி