Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் செயற்குழு வரும் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலோன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிசினி கொலோன் கூறியுள்ளதாவது, “ஆயுத மோதல் கால ஆட்கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் உதவி வழங்கும்படி முன்னைய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பலவந்தமாக கடத்தப்பட்ட அல்லது காணாமற்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இந்த குழு இலங்கைக்கு வரவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்த இந்த குழு, காணாமற்போனதாக கூறப்படுவோர் எங்கு உள்ளனர் என கண்டறிவதோடு, காணாமற்போனவர்களின் குடுப்பத்தினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஓர் இணைப்பாகவும் செயற்படவுள்ளது. 5 அங்கத்தவர்களை கொண்ட ஐக்கிய நாடுகளின் இந்த குழு ஓகஸ்ட் 03ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to ஐக்கிய நாடுகள் செயற்குழு ஒகஸ்ட் மாதம் இலங்கை வரும்: மஹிசினி கொலோன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com