Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறுபான்மைப் பலமுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க முடியாது. எனவே, பெரும்பான்மைப் பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் ஆட்சியைக் கையளிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எனவே, தமது கட்சிக்கு ஆட்சி பொறுப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

0 Responses to பெரும்பான்மையுள்ள ஐ.ம.சு.கூ.விடம் ஆட்சியை கையளிக்க வேண்டும்: சுசில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com