நாட்டில் சிறுவயதுத் திருமணங்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக வடக்குப் பகுதியில் சிறுவயதுத் திருமண வீதம் அதிகமாக உள்ளதாகவும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்.
சிறுவயதுத் திருணமங்களையும், சிறுவர் துஷ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெறும் சிறுவர் வன்புணர்வுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தேசிய பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சிறுவயது திருமணங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. 15-18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமண சதவீதம் 12ஆக காணப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணம், நாடளாவிய ரீதியில் 2 சதவீதமாக காணப்படுகிறது. இதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வடக்கிலேயே இருக்கின்றனர்.
கடந்தகால யுத்த சூழ்நிலையில் தம் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக சிறுவயது திருமணங்களை பெற்றோர் ஊக்குவித்தனர். ஆனால், இப்போதும் அது தொடர்கிறது. இந்நிலைமையினை மாற்றுவதற்காக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உதவியினை நாடியிருக்கிறோம். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாது பாதுகாப்பதே எமது இலக்காகும்.
இதேவேளை, வித்தியாவின் படுகொலையினை தயவுசெய்து அரசியலாக்காதீர்கள். அவள் வடக்கின் குழந்தை மட்டுமல்ல நமது நாட்டின் குழந்தை. நம் குழந்தையை சீரழித்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இவ்வாறான வன்புணர்வுகள் இடம்பெறாது தடுக்க வேண்டும். அதனைவிடுத்து சாவில் அரசியல் தேடும் கீழ்த்தரமான நடவடிக்கையினை அரசியல் பிரமுகர்கள் கைவிடவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் சிறுவயதுத் திருமணங்கள் அதிகரிப்பு; கட்டுப்படுத்த நடவடிக்கை: ரோஸி சேனாநாயக்க