Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் குடாநாட்டில் ஏற்பட்டு வரும் குடிநீருக்கான அச்சுறுத்தலையடுத்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பிலான கலந்தாய்வு கூட்டமொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று புதன்கிழமை யாழ். பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது.

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ். குடாநாட்டுக்குத் தண்ணீரை விநியோகிப்பதில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, வடக்கு மாகாண சபை குடாநாட்டுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று யோசனையாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முன்வைத்திருந்தது.

இத்திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியும், இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையும் ஏற்றுக் கொண்டு, கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைப்பதற்கான இடமாக மருதங்கேணி தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மருதங்கேணிக் கடற்பரப்பில் இருந்து கடல் நீரைப் பெற்றுக் குடிநீராக்கும் திட்டத்தால் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பிரதேச மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.

இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட நிபுணர் நிக்கோலாய் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்குகொண்டு விளக்கங்களை முன்வைத்தார். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினால் மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இப்பகுதியில் புதிய மீன் இனங்கள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நிபுணர் நிக்கோலாய் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இதுபோன்ற கலந்துரையாடல் மருதங்கேணியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் மத்தியிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 Responses to கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றி கலந்தாய்வு கூட்டம்; விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com