ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு வெற்றியா, தோல்வியா என்று சொல்ல முடியாதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் இடம்பெறும் சந்திப்புக்களே அதனைத் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் ஆகியோரின் கோரிக்கையின் பிரகாரமே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முக்கியமாக 5 விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தினோம். முதல் சுற்றுபேச்சிலேயே திருப்தியடைந்துவிட முடியாது. அதற்கு மேலும் பேச்சுகள் நடத்தப் பட வேண்டும். பிரதமர் வேட்பாளர் பதவியினை நான் கேட்டு வாங்கப்போவதில்லை.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரியுடனான பேச்சு வெற்றியா தோல்வியா என்று சொல்ல முடியாது: மஹிந்த