Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்து இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜீ.வி.ரவிப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமையவே இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சேவையாற்றிய பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் 1,200 இராணுவத்தினர் இணைக்கப்பட்டிருந்தனர். இந்தப்பிரிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், அவரின் பாதுகாப்புக்காக இருந்தவர்களின் எண்ணிக்கை குறைத்தார். எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு 3,000க்கும் மேற்பட்டவர்களை இணைந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்து இராணுவம் நீக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com