Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுப்ரமணிய சாமியின் இல்லத்துக்குச் சென்று, தமது சகோதரன் மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார் முக.ஸ்டாலின்.

திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தமது சகோதரன் மகன் இல்லத் திருமண விழாவுக்கு அனைத்து தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் இன்று பாமக தலைவர் ராமதாஸ், பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி இவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

பல்வேறு அரசியல் காழ்ப்புணர்வுகள் ஒருவருக்கு ஒருவர் இருந்தாலும், ஸ்டாலின் இப்படி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருவது தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியல் நாகரீகத்தைக் காட்டுவதாக அரசியல் .நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அன்புமணி ராமதாசுடன் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது இல்லத்துக்கும் சென்று நேற்று ஸ்டாலின் அழைப்பிதழ் அளித்தார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சுப்ரமணிய சாமியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார் ஸ்டாலின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com