Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டொங்கோவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பசுபிக் சமுத்திரத்தில் உலகில் புதியதொரு தீவு உருவாகியிருந்தது.

இன்னமும் பெயர் கூட இடப்படாத இந்த தீவு, டொங்கோ பிரதான தீவிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உருவாகியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் சாம்பல் கக்கத் தொடங்கியிருந்த டொங்கோ எரிமலை வெடிப்பினால் கடல் நீர் மட்டம் குறைவடைந்து இத்தீவு உருவாகியிருந்தது. அந்தப்பக்கமாக சென்ற சுற்றுலா விடுதிக் குடும்பம் ஒன்று,  புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிந்ததிலிருந்து இத்தீவு பிரபலமடையத் தொடங்கியிருந்தது.

எனினும் இத்தீவு உருவான வேகத்திலேயே மறைந்து போகும் என புவியியாளர்கள் தெரிவித்த கருத்து உண்மையாகத் தொடங்கியுள்ளது. இத்தீவு மறைந்து போகத் தொடங்கியுள்ளதுடன் சட்ட விரோதமான மணற் கொள்ளை, சூறாவளி மற்றும், புவி வெப்பயமாதலால் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களே இத்தீவின் அதி வேக மறைவுக்கும் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பசுபிக் கடலில் புதிதாக உருவான தீவு தோன்றிய வேகத்திலேயே மறைகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com