Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி, தமது சொந்த இடங்களை இழந்து அநாதரவான அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை மீளக் கையளிப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 22வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கொழும்பு புதுக்கடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை எம்மால் பறிக்க முடியாது. இந்தக் காரணத்தை மையப்படுத்தி சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசாங்கம் என்கிற வகையில் நாமே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆகவே, சர்வதேசத்துடன் முட்டல் மோதலுடன் எம்மால் செயற்பட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com