Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இரகசியப் பொலிஸாரும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகின்றது.

ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைத்து விசாரணையும் செய்துள்ளது. இந்த விசாரணைகளில் நிதிக் குற்றங்கள் தொடர்பாக காரணங்களை உறுதி செய்துகொள்ள நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கும் முடிந்துள்ளது. விசாரணைகள் முடிவுற்ற கோவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் உட்பட பல அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பாகவும், வெளிநாட்டு அமைச்சினால் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் விசிலிமிணி மாநாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பஸ் வண்டி தொடர்பான விசாரணையும் முடிவுறும் தறுவாயில் உள்ளன. மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சட்டரீதியிலான ஆலோசனைகளும் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தி; முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் கைதாகலாம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com