Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரணைமடுக் குளத்திலிருந்து வெளியேற்றப்படும் மேலதிகமான நன்னீரினை சுண்டிக்குளம் பகுதியில் வைத்து கடலில் கலக்க விட்டுவிட்டு மீண்டும் மருதங்கேணி கடலிலிருந்து கடல் நீரை பெற்று குடிநீராக்கும் திட்டம் ஒரு அறிவுபூர்வமான செயற்பாடாக அமையாது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா தெரிவித்துள்ளார்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அங்கு, கருத்து வெளியிடும் போதே எஸ்.தவராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை விநியோகிப்பதற்காக தயாரிக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி நீரை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்செல்ல ஆயிரம் லீற்றருக்கு 7 ரூபா 97 சதம் செலவாகும் என அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடல் நீரை குடிநீராக மாற்றுகின்ற திட்டத்திற்காக ஆய்வு அறிக்கையின்படி ஆயிரம் லீற்றருக்கு உற்பத்திச் செலவு 120 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நன்னீரை கடலில் கலக்க விட்டு விட்டு பின்னர் கடல் நீரை நன்னீ ராக்குவது அதுவும் மிக அதிகளவான செலவில் செய்யும் இத்திட்டம் ஒரு அறிவுபூர்வமான செயல் அல்ல. இது எத்தனையோ மடங்கு செலவீனமானது.

இந்தியாவில் இவ்வாறான செயற்பாடுகள் செய்கிறார்கள். ஏனெனில், தொழிற்சாலைகளுக்கு அந்நீரை விற்பதால் அது நட்டத்தை ஏற்படுத்தாது. ஆனால், யாழ்ப்பாணத்தில் அவ்வாறான தொழிற்சாலைகள் இல்லை. இந்நீர் மக்களின் தேவைக்காகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே, இத்திட்டம் எவ்வளவு தூரம் புத்திசாலித்தனம் அற்ற ஒரு செயற்பாடு என்பதை இங்கு அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவுபூர்வமான செயற்பாடல்ல: தவராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com