Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.நீதிமன்றத்தின் மீது வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் சேதமடைந்த பகுதிகளை படையினரின் உதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 20ம் திகதி யாழ்.நீதிமன்ற சுற்றாடலில் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை கும்பல் ஒன்று நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி நீதிமன்றத்தையும் பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியிருந்த்து.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதம நீதியரசர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை  மாலை தொடக்கம் படையினர் நீதிமன்றத்தின் சேதமடைந்த பகுதிகளை முழுமையாக அகற்றி திருத்தியமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக தண்ணீரைப் பாய்ச்சி ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்க்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் வாகனம் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

0 Responses to நீதிமன்றின் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com