போர் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் நிறைவடைவதற்கு ஒருசில நாட்களே இருந்த நிலையில் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டமை சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
முல்லைத்தீவு இராணுவத் தலைமையக கட்டளைத் தளபதியாக இருந்த அவர், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 14ம் திகதி இ.ராணுவத் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடந்த மே 7ம் திகதி ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்படுவதாக அறிவலிக்கப்பட்டது.
இதையடுத்து மறுநாளான மே 15ம் திகதி காலை 08.43 மணியளவில் அவர் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2009ல் போர் முடிவுக்கு வந்த நாளிலிருந்து இலங்கை இராணுவத்திலுள்ள சர்சசைக்குரிய தளபதிகளில் ஒருவராக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இருந்து வருகிறார். காரணம் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவர்.
இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த பிரதான படையணிகளில் ஒன்றான 57வது டிவிஷனை இவரே வழிநடத்தியிருந்தார்.
வவுனியா- மன்னார் களமுனையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை இவரது தலைமையிலான 57வது டிவிஷன் போரில் பங்கெடுத்திருந்தது.
இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இவர் மீதும் இவரது படைப்பிரிவான 57வது டிவிஷன் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்தப் போர்க்குற்றச்சாட்டுக்கள் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை பெரிதும் உலகளவில் பிரபல்யம் பெற வைத்துவிட்டன.
போர் முடிவுக்கு வந்த பின்னர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் அவருடன் இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய 58 வது டிவிஷன் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு அரசாங்கம் இராஜதந்திரப் பதவிகளை வழங்கியது.
இருவருமே போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த போதிலும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐநாவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் பெர்லினில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
பெர்லினில் இலங்கைக்கான துணைத்தூதுவராக இருந்த போது சுவிஸ் உள்ளிட்ட நாடுகளையும் கவனிக்கும் பொறுப்பு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் இருந்தது.
அப்போது சுவிஸில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில் நாட்டுக்குள் நுழைந்தால் கைது செய்யலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் கொழும்பு திரும்பிய ஜெகத் டயஸூக்கு அமெரிக்க போர்க் கல்லூரியில் மேலதிக பயிற்சிக்கு அனுமதி மறுக்க்ப்பட்டது. அதற்குப் ’போர்க்குற்றச்சாட்டுகளே காரணம்.
அதுபோலவே அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தினால அவுஸ்திரேலியாவில் ஒழுங்கு செய்யப்பட்ட பாதுகாப்புக் கருத்தரங்கிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கும் அவரது படைப்பிரிவு மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளே காரணமாகும்.
சர்வதேச அளவில் போர்க்குற்றச்சாட்டுகளால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மிகச் சுலபமாகவே இராணுவத் தலைமை அதிகாரி பதவியை பெறு்றுக் கொண்டிருப்பது ஆச்சரியமானது.
ஏனென்றால் இந்தப் பதவிப்கு ஆறு மூத்த மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை இராணுவத் தளைபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியிருந்தார்.
அவர்களில் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், மேஜர் ஜெனரல் லலித் தவுலகல, மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத்த, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இவர்களில் சிலர் போர்க்களத்தில் திறமையாகச் செயற்படாதவர்கள். உதாரணத்திற்கு மேஜர் ஜெனரல் லலித் தவுலகல பல இராணுவப் பின்னடைவுகளுக்கு காரணமானவர் என்பதால் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவினால் முன்னர் ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
அதுபோல மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவும் 2007ல் வவுனியாவுக்கு மேற்கே ஆரம்பக்கட்ட சண்டையில் பின்னடைவுகளைச் சந்தித்ததால் மாற்றப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை 2010ம் ஆண்டு தேர்தலின் பின்னர் அவரே சுற்றிவளைத்து கைது செய்திருந்தார்.
இவர்களில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே போபர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பதாலும் இறுதிப்போரில் முக்கிய பங்காற்றியவர் என்பதாலும் அவரது பெயர் இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த நியமனத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலையீடுகள் இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவராக மாறிய கஜபா தளபதியாக இருந்தாலும் போர்க்களத்தில் திறமையாக பணியாற்றிய அதிகாரி என்ற வகையில் அவருக்கு சாதகமாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பரிந்துரைகளைச் செய்திருக்கலாம.
எவ்வாறாயினும் இந்த நியமனம் இராணுவத்திற்குள் குழிப்பத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சர்வதேச அளவில் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன. அதற்குக் காரணம் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தான்.
இங்கு இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளது இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரி பதவியிலாகும்.
இலங்கையில் இராணுவத் தளபதி ஆங்கிலத்தில் commander of the army என்றே அழைக்கப்படுகிறார். அவரையடுத்து இராணுவத் தலைமையகத்தில் உள்ள இரண்டாவது நிலைப் பதவி தான் இராணுவத் தலைமை அதிகாரி chief of staff பதவியாகும்.
ஆனால் பிரித்தானிய இராணுவத்தில் chief of the general staff என்பதே இராணுவத் தளபதியின் பதவியாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தானிலும் chief of the army staff என்றே இராணுவத் தளபதிகள் அழைக்கப்படுகின்றனர்.
இப்போது மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இராணுவத் தளபதி பதவியில் chief of the army staff பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவே பல சர்வதேச அமைப்புகள் கருதிக்கொண்டிருப்பதாக உணர முடிகிறது.
அதுகூட இந்த விடயத்தில் தீவிரமான எதிர்ப்புக் கிளம்பியிருப்பதற்கு ஒரு காரணமாகும்.
இராணுவத் தளபதி பதவியில் மட்டுமன்றி எந்தவொரு உயர்நிலைப் பதவிக்கும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டே வருகின்றன.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. என்பதையே இந்த நியமனம் எடுத்துக் காட்டுகிறது.
அதேவேளை இந்த நியமனத்தின் மூலம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும நம்பகமான உள்நாட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி மீது சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியிருக்கிறது.
இந்தச் சந்தேகம் இப்போது ஏற்பட்டதல்ல. ஏற்கனவே இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்ட போதே அந்தச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
ஏனென்றால் லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தான் முதன்முதலாக போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைக்குழுவின் தலைவராக இருந்தவர்.
அவரது குழுவினர் நடத்திய விசாரணையில் படையினர் எந்தப் போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்ற அறிக்கை ஒன்றை கையளித்திருந்தார். அந்த அறிக்கையின் சாரம் மட்டுமே வெளியிடப்பட்டதே தவிர முழுமையான அறிக்க பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அதைவிட அந்த விசாரணைக்குழு முதற்கட்ட விசாரணையை முடித்து இரண்டாவது கட்டமாக சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இன்று வரை அந்த விசாரணைக்கும் தன் அறிக்கைக்கும் என்ன நடந்ததென்பது லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கே வெளிச்சம்.
எனவே தனது தலைமையில் நடத்தப்பட்ட ஒரு இராணுவ விசாரணையில் எந்த மீறல்களும் இடம்பெறவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு முரணான ஒரு அறிக்கை வெளியாவதை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா விரும்புவாரா? அனுமதிப்பாரா? என்ற கேள்வி உள்ளது.
இரண்டாவதாக இப்போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸூம் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவராகவே இருக்கிறார்.
இவ்வாறாக இராணுவத் தலைமையிலுள்ள முதல் இருவரும் போர்க்குற்ற விசாரணையுடன் சம்பந்தப்பட்டவர்களாக உள்ள நிலையில் உண்மையான விடயங்களை இராணுவத்தினர் மூலம் வெளியாவது சாத்தியமாகுமா? என்ற கேள்வி உள்ளது.
இத்தகைய பாதகமான சூழ்நிலையில் இலங்கை இராணுவத்திற்குள் இருந்து போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நம்பகமான சாட்சியங்களைப் பெறுவதென்பது எந்தவொரு போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கும் குதிரைக் கொம்பான காரியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சுபத்ரா

0 Responses to போர்க்குற்ற விசாரணை! சந்திக்கவுள்ள கேள்விகள்! - சுபத்ரா