Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்து சனிக்கிழமை அன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகம் வந்து பல்வேறுக் கோப்புக்களில் கை எழுதிட்டார்.

சொத்துக்குப்விப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா, கடந்த சனிக்கிழமை மீண்டும் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற மறுநாளான நேற்று ஞாயிற்றுக் கிழமை தலைமைச் செயலகத்தில் உள்ள தமது அறைக்குச் சென்று கிராமப்புற குடிநீர் மற்றும் சாலை மேம்பாட்டுக் குறித்தக் கோப்பு, குக்கிராமங்களுக்கு கழிவு நீர் போக்கு வசதி, சாலை வசதி, நகர்ப்புற சாலை சீரமைப்பு, மகளிரை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், கிராம ஏழைகளுக்கு வீடு வசதி உள்ளிட்ட பல்வேறுக் கோப்புக்களில் கை எழுத்திட்டார்.

சென்னை, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 201 அம்மா உணவகங்களை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.நியாய விலைக் கடைகளில் அரை கிலோ துவரம் பருப்பு 53 ரூபாய் 50 பைசாவுக்கும், உளுந்தம் பருப்பு அரை கீலோ 49 ரூபாய் 50 பைசாவுக்கும் என்கிற வகையில் வழங்கும் புதியத் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

0 Responses to நேற்று தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா பல்வேறு கோப்புக்களில் கை எழுத்திட்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com