முதல்வர் ஜெயலிதாவின் தீர்மானத்தின் படி, நூறு என்கிற இலக்கை எட்டியது அம்மா மலிவு விலை மருந்தகங்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை உறுதியாகி பதவியை இழப்பதற்கு முன்னர் முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழகத்தில் 100 அம்மா மலிவு விலை மருந்தகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அப்போது 84 மருந்தகங்கள் அமைக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா பதவியை இழக்க நேர்ந்தது. ஆனால் சொத்துக் குவிப்பு தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் குற்றமற்றவர் என்று ஜெயலலிதா விடுதலையான நிலையில் அவர் மீண்டும் நேற்று முன்தினம் தமிழக முதல்வராகப் பதவி எற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று சில நலத்திட்டங்களைத் துவக்கி வைத்த ஜெயலலிதா, இன்று மேலும் சில மாவட்டங்களில் 16 அம்மா மருந்தகங்களை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். இப்போது தமிழகம் முழுவதும் 100 அம்மா மலிவு விலை மருந்தகங்கள் உள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to நூறு என்கிற இலக்கை எட்டியது அம்மா மலிவு விலை மருந்தகங்கள்!