Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்து அமைச்சர்களான டிலான் பெரேரா, சி.பி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்த அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்கவே கொண்டு நடத்துகின்றார். அவர், பழிவாங்கலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பொலிஸ் மா அதிபருக்கு ஆணையிடுவதும் அவரே என்றும் டிலான் பெரேரா, சி.பி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

0 Responses to வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசில் இருப்பதில் பயனில்லை; பதவி விலகிய அமைச்சர்கள் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com