புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை பாடசாலைகளின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிறைவடைந்தது.
இதன் காரணமாக இன்று கல்முனை பகுதிகள் எங்கும் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், அனைத்து வியாபார தளங்களும் மூடிக்காணப்பட்டது. புங்குடுதீவு மாணவியின் படுகொலையினை கண்டித்து வட கிழக்கில் உள்ள பாடசாலைகளின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அதனொரு கட்டமாக இன்று காலை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை, சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம் முன்பாக அமைதி வழியிலான போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள்.
இதன் போது மாணவர்கள் ஒன்று கூடிய இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நீதிமன்ற உத்தரவினை காட்டி உடனடியாக அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
ஆனாலும் அங்கு கூடி நின்றவர்கள், மாணவர்கள் தங்களுக்கான நீதியினை கேட்டு மனுக் கொடுக்க வந்திருக்கின்றார்கள், அவர்கள் எந்தவிதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடாமல் தங்களது கோரிக்கையினை பிரதேச செயலாளரிடம் கையளிக்கவே வந்திருக்கின்றார்கள் என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து பொலிசார் அந்த நிகழ்வு முடிவடையும் வரை அந்த இடத்தை விட்டு அகலாமல் அங்கேயே நின்றிருந்தார்கள்.
அங்கு கூடி நின்ற மாணவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கும் போது, வித்தியாவின் படுகொலையினை மாணவர் சமுதாயம் முற்றாக எதிர்ப்பதாகவும் நேற்று சரண்ணியா, இன்று வித்தியா நாளை யார் என்ற வினாக்களையும் கேட்டிருந்தார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறான கீழ்தரமான படுகொலையினை செய்தவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை இந்த அரசாங்கம் கொடுக்கவேண்டும்.
அத்தோடு இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதோடு ஜனாதிபதிக்கான மகஜரை கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தடையுத்தரவை தாண்டி வித்தியாவிற்கு ஆதரவாக கல்முனையில் ஆர்ப்பாட்டப் பேரணி