Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னராக வேண்டிய தேவை ஏதும் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டை அபிவிருத்தி செய்வதே இலக்கு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலனறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “பொலன்னறுவை இராசதானியில் 732 வருடங்களுக்கு பின்னர், அரச தலைவராக தெரிவானாலும் நான் மன்னர் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். மன்னரை போன்று ஆடைகளை நான் அணிவதில்லை.

ஜனாதிபதி என்ற வகையிலுள்ள எல்லையற்ற அதிகாரங்களை பயன்படுத்தி அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவும் நான் செயற்படுவதில்லை. பொருளாதாரத்தில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம், நாட்டிற்கு தேவையான அரசியல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவே நான் முயற்சிக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to மன்னராக வேண்டிய தேவை எனக்கில்லை; அபிவிருத்தியே இலக்கு: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com