Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார், தமது நாட்டு பிரஜை இல்லையென சுவிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவாலயம்  இன்று அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் சுவிஸ் அரசு பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்துவதுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.

இதேவேளை கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபரொருவர் சுவிஸ் பிரஜை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் இலங்கை பிரஜையே. எனினும் சுவிஸில் வதிவிட அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சுவிஸ் குமார் எமது நாட்டுப் பிரஜை இல்லை: சுவிஸ் தூதரகம் அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com