Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய கிழக்கில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் இணைந்துள்ளதாக மத்திய நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தின் கல்யாண் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் உட்பட 11 பேர் அதில் சேர்ந்துள்ளதாக நுண்ணறிவு பிரிவு முதல் முறையாக தனது இரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்தியொன்று கோடிடுகின்றது. இதில் 5 பேர் ஈராக், சிரியா போரில் உயிரிழந்துவிட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கல்யாணைச் சேர்ந்த ஆருப் மஜுத் என்ற தீவிரவாதி அண்மையில் இந்தியாவுக்கு திரும்பிய போது தேசிய புலனாய்வு பிரிவு அவனை கைது செய்தது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவர்களில் இருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ள ஆருப் மஜுத், ஹைதராபாத்தில் இருந்து மேற்படிப்புக்காக இலண்டன் சென்ற ஹனைத் வாஸ் என்ற மாணவரும் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சிரியா போரில் கலந்து கொண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

தன்னுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயகத்தில் சேர்ந்த கல்யாணைச் சேர்ந்த 3 பேரின் பெயர்களையும் ஆருப் மஜுத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களுரூ, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளதாகவும், இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பது தான் அவர்களது பணி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் 11 இந்தியர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com