Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் வேட்பாளாராக களம் காணும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதன்கிழமை ஆரம்பித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ஜெயலலிதா முதல்வர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் கடந்த வருடம் இழந்தார். ஆனாலும், கர்நாடக உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பினை இரத்து செய்து, ஜெயலலிதாவை அண்மையில் விடுவித்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சரானார். ஆனாலும், அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்காக இடைத்தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவானது. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த வெற்றிவேல், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்.

வெற்றிடமான இந்த தொகுதிக்கு ஜூன் 27ஆம் திகதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. வேப்பு மனுக்களை வரும் 10ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். 11ஆம் திகதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுக்களை வாபஸ் பெற 13ஆம் திகதி கடைசி நாள். 27ஆம் திகதி காலை 08.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 30ஆம் திகதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

0 Responses to ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com