Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கையெழுத்திடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பந்துல குணவர்த்தன உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். எதிர்வரும் 09ஆம் திகதியளவில் அதனை சபாநாயகரிடம் கையளிக்கவும் உத்தேசித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 80 உறுப்பினர்கள் மாத்திரமே கையெழுத்திட்டுள்ளதாகவும், அமைச்சர்களாக பதவி வகிக்கும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதையும் மீறி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளதாக தெரிகின்றது.

0 Responses to பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; சு.க. உறுப்பினர்கள் கைச்சாத்திட தயக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com