Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் பொருளாதார மற்றும் சமாதானத்துக்கான நிறுவகத்தின் 2015ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 114வது இடத்திலும், இந்தியா 143வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

162 நாடுகளை உள்ளடக்கிய இந்த தரப்படுத்தல் தேசிய சமாதானம் தொடர்பான அளவீடுகளிலிருந்து கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தெற்காசிய நாடுகளான, பூட்டான் 18வது இடத்திலும், நேபாளம் 62வது இடத்திலும், பங்களாதேஷ் 84வது இடத்திலும், இலங்கை 114வது இடத்திலும், இந்தியா 143வது இடத்திலும், பாகிஸ்தான் 154வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162வது இடத்திலும் உள்ளது.

இதேவேளை மிகவும் அமைதியான நாடு என்ற பட்டத்தை ஐஸ்லாந்து இம்முறையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

0 Responses to உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114வது இடம், இந்தியாவுக்கு 143வது இடம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com