Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தினை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தேர்தல் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அது குறித்து ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு எதிர்தரப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ள போதும், இறுதியில் இரு நாள் விவாதம் நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், இன்று பிற்பகல் 02.00 மணி முதல் 06.30 மணி வரையும், நாளை காலை 10.30 முதல் 06.30 மணி வரையும் விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தில் கூடியது. இதன்போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to 20வது திருத்தம் மீதான ஒத்திவைப்பு விவாதம் இன்றும் நாளையும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com