நாட்டில் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதற்கு போதைப்பொருள் பாவனையும் பெரும் காரணமாக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
சராசரியாக 50 வீடுகளை எடுத்து கொண்டால் அதில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக களனியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தரான விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள 200 இலட்சம் பேரில் 1 இலட்சம் பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாக கூறிய அவர், கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை, வன்புணர்வுகள் போன்ற குற்றச் செயல்களின் அதிகரிப்பிற்கும் இதுவே காரணம் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to கொலைகள், பாலியல் வன்முறைகள் அதிகரிப்புக்கு போதைப்பொருள் பாவனையும் முக்கிய காரணம்: விஜித ஹேரத்