ஊழல் மோசடியில் ஈடுபட்டிராத எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் சாத்தியமுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான விருப்பத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களைத் தவிர்த்த வேறு பலரும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக முண்டியடிக்கின்றனர். கட்சி மாறுவதாக இருந்தாலும், புதிதாக கட்சியில் இணைந்து கொள்வதானாலும் அவர்களது தனிப்பட்ட ஊழல் மோசடி விடயங்கள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அஜித் பி பெரேரா கூறியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலிற்குப் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்று வேண்டுமென்பதில் அக்கறை செலுத்தி வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலும், அரசாங்கத்திலும் ஊழல் மோசடிக்கு எதிரானவர்கள் மாத்திரம் இருக்க வேண்டுமென்பதே எமது குறிக்கோளாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஊழல் மோசடி அரசியல்வாதிகளுக்கு ஐ.தே.க.வில் இடமில்லை: அஜித் பி பெரேரா