Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அவரது உத்தியோகபூர்வ பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராகவே மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட விரும்புகின்றார். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிக்காவிடில் புதிய அணியில் களமிறங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது முடங்கிப் போயுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் பேச்சாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to மஹிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார்; உத்தியோகபூர்வ பேச்சாளர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com