மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
குறித்த விசாரணை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் நடைபெற இருந்த போதும், இந்தப் பிரிவுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
முன்னாள் முதல் பெண்மணியினால் நடத்தப்பட்டு வந்த ‘சிரிலிய சவிய’ சமூகசேவை அமைப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கினால் உரிய நோக்கம் நிறைவேற்றப்படவில்லை எனவும், இதற்காக போலி ஆவணங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் முறையிடப்பட்டிருந்தது.
புஹுல்வெல்ல வங்கிக்கிளையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சிரிலக்க சவிய கணக்கில் பல்வேறு வங்கிக் கிளைகளிலிருந்து பல கோடி ரூபா பணம் வைப்பு செய்யப்பட்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வங்கிக் கணக்கில் ஷிராந்தி ராஜபக்ஷவின் அடையாள அட்டை இலக்கமாக 222222222 என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

0 Responses to சபாநாயகர் இல்லத்தில் வைத்து ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை!