Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காய்ந்த பூசணிக்காய் அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்கிற மந்திரத்தை வாசுதேவ நாணயக்கார உச்சாடனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கட்சிக்குள் சூழ்ச்சிகள் தலைதூக்கி உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், “அண்மையில் இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பூசணிக்காய் அரசியல்வாதி ஜனாதிபதி ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டுமென்று கருத்துக்களை வெளியிட்டிருந்தார்” என்றுள்ளார்.

63 இலட்சம் மக்களின் ஆதரவைப் பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்படுபவர்களிடமிருந்து நாம் ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்துக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையில் வாக்குவதாம் ஏற்பட்டது. இதன்போது, வாசுதேவ நாணயக்கார, ரணில் விக்ரமசிங்கவை தகாத வார்த்தைகளினால் திட்டியிருந்தார். இதனையடுத்து, ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, வாசுதேவ நாணயக்கார காய்ந்த பூசணிக்காய் என்றும், அது பயன்பாட்டுக்கு உதவாது என்றும் கூறியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

இதனிடையே, இரத்தினபுரியில் அண்மையில் கூட்டமொன்றில் பேசிய வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தூசண வார்த்தைகளினால் விழித்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to காய்ந்த பூசணிக்காய் அரசியல்வாதியிடமிருந்து மைத்திரியைக் காப்பாற்ற வேண்டும்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com