Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 109 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்றையதினம் (வியாழக்கிழமை) பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

109 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள அதேநேரம், மேலும் நான்கு பேர் கைச்சாத்திடவிருப்பதாகவும், 113 உறுப்பினர்களின் கைச்சாத்துக்கள் பெறப்பட்ட பின்னர் இதனைக் கையளிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 100 பேர் கைச்சாத்திட்டிருப்பதாகவும், இதற்கு முன்னுரிமை அளித்து விரைவில் அதனை விவாதத் துக்கு எடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

0 Responses to பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சமர்ப்பிப்பு; 109 பேர் கைச்சாத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com