Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பு செயலணியொன்றை ஸ்தாபிக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள மேற்படி செயலணியினூடாக, வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய மேற்படி செயலணியை ஸ்தாபிக்க பொதுமக்கள் பாதுகாப்பு கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்புச் செயலணி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com