புதிய தேர்தல் சீர்திருத்தம் உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழேயே எதிர்வரும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேர்தல் முறையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாறுதலும் இராது. அந்த எண்ணிக்கை 225 ஆகவே இருக்கும். எனினும் புதிய தேர்தல் நடைமுறையில் 125 இடங்கள் தொகுதி அடிப்படையிலும், இதர 100 இடங்களில் 75 இடங்கள் விகிதாசார அடிப்படையிலும், எஞ்சிய 25 இடங்கள் தேசியப் பட்டியலின் கீழான நியமனங்கள் மூலமும் நிரப்பப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை அமைச்சரவை கூடியது. இதில் புதிய தேர்தல் முறைமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
தற்போதுள்ள பாராளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படும் சூழலில், அமைச்சரவையின் இந்த முடிவு வந்துள்ளது. ஆனாலும் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் முழுமையாக விகிதாசார அடிப்படையிலேயே நடைபெறும் எனவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

0 Responses to புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!