வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண முதலமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதன்பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் பிரத்தியேகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்போதே, ஜனாதிபதி வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான இணக்கப்பாட்டினை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால், வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியினைப் பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்!