ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு மெதுவானது என்கிற போதிலும், அதன் நோக்கம் சீரானது என்கிற ரீதியில் அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வழங்கும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அரசியல் தளம் வடக்கு, கிழக்கு என்கிற போதிலும், வரும் பொதுத் தேர்தலில் மேல் மாகாணத்திலும் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு கிழக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் நாம் முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல் பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய நிலையில் நாம் தேசிய பிரச்சினைகளில் பங்களித்து வருகிறோம்.
எவ்வாறாயினும், நாம் கரிசனை கொண்டுள்ள தேசிய பிரச்சினை என்று ஒன்றுள்ளது. அது தீர்க்கப்பட வேண்டும். அதை தேர்தலுக்கு முன்னர் முழுமையாக தீர்க்க வேண்டிய தேவையில்லை என நாம் இந்த அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.
இதை பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் பாராளுமன்றத்தில் கூறினர். இந்த அரசாங்கம் 19வது திருத்தின் போது இது பற்றி கூறியது. அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறினார். இந்த தீர்வு எமது கரிசனையாகவும் மக்களின் கரிசனையாகவும் உள்ளது.
அரசாங்கம் சரியான திசையில் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. ஆனால், காணி மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
100 நாட்களினுள் முழுக் காணிகளும் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், 5 சதவீதமான காணிகள் தான் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இதையிட்டு நாம் விரக்தியடைந்துள்ளோம். அரசாங்கம் , காணிகளை விடுவித்து வருவதால்தான் நான் அரசாங்கம் நல்ல வழியில் செல்வதாக கூறினேன்.
அடுத்த பிரச்சினை, அரசியல் கைதிகளைப் பற்றியதாகும். அவர்களை விடுவிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், எவரும் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என ஜனாதிபதி கூறியது கவலையளிக்கின்றது. இவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் சுயநலனுக்காக அதை செய்யவில்லை. அவர்கள் செயல் அரசியல் நோக்கம் கொண்டது. எனவே, அவர்கள் அரசியல் கைதிகள் என ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர வேண்டும்.
அரசியல் கைதி என்பதற்கு ஓர் அர்த்தம் உள்ளது. நெல்சன் மண்டேலா அரசியல் கைதியாக இருந்தார். அப்போது தென்னாபிரிக்க அரசாங்கத்திடம் இதுபற்றி கேட்டிருந்தால், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றுதான் கூறியிருக்கும்.
உலகம் முழுதும் நெல்சன் மண்டேலாவை அரசியல் கைதியாக அங்கிகரித்திருந்தது. எனவே, அரசியல் கைதிகள் இருப்பதை எமது ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் மெதுவாக செயற்பட்டாலும் சரியான திசையிலேயே செல்கின்றது. பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் ஆர்வமற்று இருந்ததை நாம் இதுவரை காணவில்லை. எனவே, அழுத்தம் கொடுத்தவாறு அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு மைத்திரி அரசை தொடர்ந்தும் ஆதரிக்கும்; வடக்கு- கிழக்கிற்கு வெளியிலும் போட்டியிடும்: எம்.ஏ.சுமந்திரன்