Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து மேல் மாகாணம் மற்றும் மலையகத்தை மையப்படுத்தி ‘முற்போக்கு தமிழ்க் கூட்டணி’ எனும் பெயரில் அரசியல் கூட்டணி ஒன்றை இன்று புதன்கிழமை கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்கின்றன.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம் ஆகியோர் புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.

இந்தக் கூட்டணியின் தலைவராக மனோ கணேசனும், பிரதித் தலைவர்களாக திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருப்பார்கள் என்று தெரிகின்றது.

0 Responses to மனோ, திகா, இராதா இணைவு; ‘முற்போக்கு தமிழ்க் கூட்டணி’ இன்று அங்குரார்ப்பணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com