தனது சேவை நாட்டுக்கு தேவையாக உள்ளதாகவும், அப்படியான நிலையில், தான் நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், “இந்த நாட்டுக்கு என்னுடைய தேவை உள்ள இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டுச் செல்லமாட்டேன்” என்று அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டில் நிலைத்திருப்பதற்காக கொடுக்கப்படும் தைரியத்தையும், தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மதிப்பதாக குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ, “சிங்கப்பூரிலிருந்து எனக்கு கிடைத்துள்ள அழைப்பு தொடர்பில் நீங்கள் அனைவரும் என்னிடம் எழுப்பும் கேள்விகளிலிருந்தே, நான் இந் நாட்டைவிட்டுச் செல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது.” என்று கூறியுள்ளார்.

0 Responses to எனது சேவை நாட்டுக்கு தேவை. ஆதலினால், வெளியேற மாட்டேன்: கோத்தபாய