Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் கடந்த 20 வருடங்களாக தங்களது குடும்ப நண்பர் என்று லலித் மோடி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், கடந்த 20 வருடங்களாக தங்களது குடும்ப நண்பராக இருக்கிறார் என்றும், அவரது கணவர் தமக்காக பல்வேறு வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு தாம் போர்ச்சுக்கல் செல்ல உதவிய சுஷ்மாவுக்கு எந்த ஒரு பிரதி உபகாரத்தையும் தாம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமக்கு எதிராக செயல்பட்டது என்றும், ப.சிதம்பரம் தம்மை இந்தியாவுக்கு அழைக்க பல வகைகளிலும் முயற்சித்தார் என்றும் கூறியுள்ள லலித் மோடி, இந்தியாவுக்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்றுதான் இந்தியாவுக்கு வராமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கல் செல்ல ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஜெவும் உதவினார் என்று லலித் மோடி கூறியுள்ளது தற்போது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

0 Responses to சுஷ்மா பல வருடங்களாக குடும்ப நண்பர்: லலித் மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com