Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த சிறப்புக் காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலையை அடுத்து, அங்குள்ள மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் அந்த சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார்.

மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணையில் சிறிலங்கா காவல்துறையினர் இழைத்த தவறுகளும் இந்த விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேகநபரை விடுவித்த மூத்த காவல்துறை அதிகாரியிடம், இந்த சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகளை நடத்தவில்லை.

அவரிடம் காவல்துறை தலைமையகம், விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கொள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to வித்தியா படுகொலை தொடர்பான காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com