தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.
கர்நாடக அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தார்.
சுமார் 2 ஆயிரத்து 400 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்தது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சொத்துகளை கணக்கீடு செய்ததில் தவறு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவினை பரிசீலித்த உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம், மனுவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
இதனையடுத்து, இந்த மனு, உச்சநீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் உள்ள மனுக்களின் பட்டியலில் இணைக்கப்படும். பின்னர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, மனுவினை ஆராய்ந்து விசாரணை நீதிபதிகள் யார் யார் என்பதை முடிவு செய்வார்.
இதனையடுத்து, விசாரணை அமர்வு, ஜெயலலிதா தரப்பினர் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடும். இதனையடுத்து, விசாரணை தொடங்கப்படும்.

0 Responses to ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேன்முறையீடு!