Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசிய பாதுகாப்புககு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பும், ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையை மையமாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எழுதியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அரசாங்கம் மிக நிதானமாக கண்காணித்து வந்ததால்தான், புலிகள் மீள தலைதூக்குவதனை தடுக்க முடிந்தது. 2009ஆம் ஆண்டின் பின்னர் தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை என்பதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக அழிந்து விட்டதாக அர்த்தப்படாது. தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கம் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை குறைக்கத் தொடங்கியுள்ளதாகவும், மிக முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மீண்டும் புலி வரும் சாத்தியம்; நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com