Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகவோ, தேசியப்பட்டிலினூடு பாராளுமன்ற உறுப்பினராகவோ நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனாலும், முன்னாள் ஜனாதிபதிக்கு கௌரவம் மிக்க பதவியொன்றை தன்னால் வழங்க முடியுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ, அவருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்போ வழங்கப் போவதில்லை என நான் கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார். நான் கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தது தவறானது. அதை, ராஜித ஏற்றுக்கொண்டார்.

ஆனால், ராஜித கூறியது போன்றதே எனது நிலைப்பாடும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ, அவருக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பத்தை வழங்கவோ, தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கவோ தயாரில்லை.

ஆனால், முன்னாள் ஜனாதிபதிக்கு கௌரவமான பதவி ஒன்றை வழங்க முடியும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதீர் மொஹமட், சிங்கப்பூரின் லி குவான் யூ ஆகியோர் பதவி கைவிட்ட பின்னர் நாட்டுக்குச் சேவையாற்றிய விதத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டுக்குச் சேவை செய்யும் வகையில் சந்தர்ப்பம் கிடைக்கும். மஹிந்த ராஜபக்ஷ அந்த கௌரவமான பதவியை வகித்துக் கொண்டு இலங்கையின் சார்பில் வெளிநாடுகளுக்குச் செல்லவும் இலங்கைக்காக சர்வதேச தொடர்புகளைக் கட்டியெழுப்பவும் முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்க முடியாது; ஆனால், கௌரவ பதவியொன்றை வழங்க முடியும்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com