Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பௌத்த மஹா சங்கத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, தலையிடுவதோ சிறந்ததல்ல என்று கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

மஹா சங்கத்தினர் மக்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது பொது பல சேனாவின் செயற்பாடுகள் காரணமாக அந்த அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ.காதர், கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரை கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

0 Responses to பௌத்த மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல: அஸ்கிரிய பீடாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com