Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக ‘ஐக்கிய நாடுகளின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியத்தினூடு’ அதிகளவான வளங்கள் ஒதுக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதைத் தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு செப்டெம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் போது, நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க ஆவலமாக உள்ளதாகவும் பான் கீ மூன் இதன்போது தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு அதிகளவான வள ஒதுக்கீடு: ஐ.நா.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com