Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்களுக்கான சேவையில் எவரும் பிரிந்து நின்று செயற்பட முடியாது. அதுபோல, காலம் தாழ்த்தாது தீர்த்து வைக்க வேண்டியது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் பொறுப்பு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று குறைகளை ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை வழங்கவுள்ளோம். இக்கலந்துரையாடலில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன புனரமைப்புப் பணிகளுடன் அணைகளைப் பாதுகாக்கும் கருத்திட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும். ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய பாடசாலைகளையும் அடையாளம் காணப்பட்ட சில பாடசாலைகளில் கட்டட அபிவிருத்திகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to மக்கள் சேவையில் பிரிவினைகள் வேண்டாம்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com