மட்டக்களப்பு களுவன்கேணி புகையிரதக் கடவையில் ஏற்பட்ட விபத்தில் புகையிரதத்தினால் அடித்துச் செல்லப்பட்ட யுவதியொருவர் துண்டு துண்டாக சிதைவடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 4.30 மணியளவில் களுவன்கேணி புகையிரதக் கடவையில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு யுவதிகள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்தில் ஒரு யுவதி சம்பவ இடத்திலேயே சிதைவடைந்து பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு யுவதி புகையிரதத்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்டநிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுவன்கேணி பிள்ளையாரடி வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கிசாந்தினி (21) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் களுவன்கேணியை சேர்ந்த பிரியதர்சினி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to மட்டக்களப்பு, களுவன்கேணி புகையிரத விபத்தில் துண்டு துண்டாக சிதைந்த பெண்!