Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் ஆட்சி அரசாங்கம் நடப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள் என்று காங்கிரஸ் தமிழகத் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததுக் குறித்த துண்டுப் பிரசுரத்தை மக்களிடையே தங்களது கட்சித் தொண்டர்களுடன் விநியோகித்தார் இவிகேஎஸ் இளங்கோவன். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி அரசாங்கம் நடப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

காரணம் அமைச்சர்கள் யாரும் தங்களுக்கான மக்கள் பணியை செய்யாமல், ஆர்.கே. நகர் தொகுதிப் பிரச்சாரத்தில் அன்றாடம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடா வெகு ஜோராக நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார். இதை தேர்தல் அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் மெத்தனமாக இருக்கிறார்கள் என்கிற குரச்சாட்டையும் அவர் வைத்துள்ளார்.

0 Responses to தமிழகத்தில் ஆட்சி அரசாங்கம் நடப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள்: இவிகேஎஸ்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com