Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வு படுகொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் என்கிற நபர் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வித்தியா படுகொலை தொடர்பிலான விசாரணை இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது, சுவிஸ் குமார் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 'பீ' அறிக்கையானது, பிழையாக உள்ளதாக மாணவி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

அந்த அறிக்கையில், மாணவி சடலமாக மீட்கப்பட்ட திகதி பிழையானதாகவும் சந்தேகநபர் 16ஆம் திகதி பொதுமக்களால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும், அவர் தொடர்பான சான்றுகள் எதுவும் இல்லாமையால் அவர் விடுவிக்கப்பட்டு தொடர்ந்து வெள்ளவத்தையில் வைத்து பிடிக்கப்பட்டார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு முரண்பட்டுள்ள அறிக்கை, பலதரப்பட்ட சந்தேகங்களை எழுப்புகின்றது. சுவிஸ் பிரஜையை தப்பிக்க வைப்பதற்காக அதிகாரிகள் சிலர் முயற்சித்துள்ளனர் என்ற சந்தேகம் எழுகின்றது என வித்தியா சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கூறினர். இதனையடுத்து 'பீ' அறிக்கையை சரியான முறையில் தயாரித்து நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, வித்தியா படுகொலையின் சந்தேகநபர்களான 9 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


0 Responses to வித்தியா படுகொலை விசாரணை; சுவிஸ் குமார் பற்றி முழுமையான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com